Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
D. Imman
Performer
Madhan Karky
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
Composer
Madhan Karky
Songwriter
Lyrics
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
பப்பப்ப பப்பா பப்பா பப்ப
பப்பப்ப பப்பா பப்பா பப்ப
எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
என்னை என்னை போலே
ஏற்றுகொண்டதாலே
எதிரொலியாகிடுவாயே
கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆக்கிட வந்தாயே
சண்டைகள் போடவும்
பின் வந்து கூடவும்
ஆயிரம் கரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே நீ தூரிகையே
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேக்க
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே(நீயே)
என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே(அருந்துகிறாயே)
எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே(கொன்றாயே)
நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யார் இந்த நான் என சொன்னாயே
செவ்வானம் நானே நீ அவந்திகையே
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே (இன்பியே)
ஹோ ஹோ ஒஹ்
நண்பியே... ஹோ ஹோ ஒஹ்
மெய் நிகராட்டங்கள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்
இணைய தொடரை இணைந்தே
மெய் காண்போமே
அழுதால் உடனே
நீ துடைப்பாய்
மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும்போதே
தொடங்கும் எதையும்
நீ முடிப்பாய்
நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன் வரையும்
குறுநகையே
எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)
எனை திறக்கும் அன்பியே(அன்பியே)
எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)
எனை இழுக்கும் இன்பியே(நண்பியே)
நண்பியே...
எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)
எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)
Written by: D. Imman, Madhan Karky, Madhan Karky Vairamuthu


