Credits

COMPOSITION & LYRICS
Ezekiah Francis
Ezekiah Francis
Songwriter

Lyrics

சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும்
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்... ஆ... ஆ...
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்
மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு... ஆ... ஆ...
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்... ஆ... ஆ...
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்
யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார்... ஆ... ஆ...
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார்
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்... ஆ... ஆ...
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்... ஆ... ஆ...
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
என் ஆண்டவர் வாக்கு பலிக்கும்
Written by: Ezekiah Francis
instagramSharePathic_arrow_out

Loading...