Lyrics

தீம்-தீம்-த-தெரெநா (ஆ-ஆ) (ஆ-ஆ) தெரெ-தீம்-தீம்-த-தெரெநா வானம் நெருங்கினால், உன் வார்த்தை நெருங்குமா? சின்னச் சின்னச் சொல்லுக்குள்ளே சித்திரங்கள் வைத்தாய் எண்ணத்திலே உள்ள உண்மை ஏன் மறைத்து வைத்தாய்? வானம் நெருங்கினால், உன் வார்த்தை நெருங்குமா? நெடுந்தூரம் குறுகினால், உன் மௌனம் விலகுமா? கண்ணு முன்னே வந்துபோகும் காட்சிகள் நூறு உன் உள்ளத்துள்ளே உள்ளதைக் காட்டும் கண்ணாடி ஏது? பூ உதிரும், அழகே (அ-ஆ-ஆ-அ-ஆ) பூஞ்சிரிப்பில் ரசித்தேன் பேசத் தெரியா, பெரிய கடலின், ஆசை அலைகள் அறிவதார் மேக கூட்டில், மழையின் துளிகள், வீழும் நாளை சொல்வதார் பட்டுப் பட்டுப் பாதம் பட்டு நீ நடந்த சாலைச் சவடு தொட்டுத் தொட்டு கண்ணில் ஒற்றும் காலை வந்தாலா நீ அழைப்பாய், இனிப்பாய் (அ-ஆ-ஆ-அ-ஆ) ஓ ஒ, நீ கதைப்பாய், சிறப்பாய் பூவின் இதயம், தேனின் சயனம் தென்றல் தீண்டிப் பார்க்குதே தேவி நடையில், பூமி சிலிர்க்கும் நெருஞ்சிக் குறிஞ்சி ஆகுதே தேதி விட்டுத் தேதி ஒன்று வேகமாக ஓடும்போது அந்தியுடன் கைகுலுக்கும் சந்திரனாய் வந்தாய்
Writer(s): Karthik Kodakandla, Kiruthiya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out