Lyrics

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம் வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் என்னை தழுவியதென்ன பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பெளர்ணமியே ஒளியாதே பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்து போனேன் என் கதி என்ன மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
Writer(s): Palani Bharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out