Lyrics

(லுலுலுலு லுலுலுலு) வாராரு வாராரு அழகர் வாராரு (லுலுலுலு லுலுலுலு) வாராரு வாராரு அழகர் வாராரு சப்பரம் ஏறி வாராரு நம்ம சங்கடம் தீர்க்க போராரு உலகம் காக்க வாராரு உல்ல கலகம் தீர்க்க போறாரு ஆ வெட்டவெளி பொட்டலிலே சாதி சனம் கூட்டி ஆ பொட்டழகையும் கண்ணழகையும் கட்டழகையும் காட்டி வாராரு வாராரு அழகர் வாராரு (லுலுலுலு லுலுலுலு) ஆகாயம் பூமி எல்லாம் ஆட்டி வச்சவர் அழகரு! (ஆட்டி வச்சவர் அழகரு!) ஐம்பூதம் பிரிஞ்சிருந்தத கூட்டி வச்சவரு அழகரு! (கூட்டி வச்சவரு அழகரு!) சமயங்களில் வேற்றுமையை பூட்டி வச்சவரு அழகரு! (பூட்டி வச்சவரு அழகரு!) சமயம் வந்தா சக்கரத்த தீட்டி வச்சவரு அழகரு! (தீட்டி வச்சவரு அழகரு!) முந்துது முந்துது சாதி சனம் அட அழகர் கண்ணுல சிக்கலையே! வந்தது வந்தது கோடி சனம் நம்ம வைகரை நிக்க பத்தலையே! வாராரு வாராரு அழகர் வாராரு ஏ! (லுலுலுலு லுலுலுலு) வாராரு வாராரு அழகர் வாராரு (லுலுலுலு லுலுலுலு) (லுலுலுலு லுலுலுலு) சாமி கண்டதும் பாதி சனங்க சாமி ஏறி ஆடுதே! சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே! உச்சி அழக பார்த்த பிறகு உச்சந்தலையில் ஏறுதே! சண்ட மறந்து சத்தம் மறந்து சச்சரவுகள் தீருதே! வெள்ளி மலையில சாமியாடி இது ஏழைங்க பக்கமே நிக்குமடி! நன்மையடி தினம் நன்மையடி இனி நாடு முழுக்க நன்மையடி அவரு தொட்டா துளங்கும் காலமடி நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி கொட்டோ கொட்டுனு கொட்டுமடி செல்வம் கூரைய பிரிச்சு கொட்டுமடி வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம் அழகர் வாழியாவே! கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கண்டோம் மதுரை வாழியாவே கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியாவே! தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடவே! தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடவே!
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out