Lyrics

பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேகமே காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன ஸ்நேகமே தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள ஞாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டி கொள்ள சொந்தம் இல்லை வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுடன் சேர்வதில்லை காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே இதய கூட்டை பூட்டிக் கொண்டு கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேகமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
Writer(s): G. V. Prakash Kumar, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out