Music Video

Credits

PERFORMING ARTISTS
Unni Menon
Unni Menon
Performer
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Songwriter

Lyrics

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான் மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான் அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மார்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டார் உலக மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா ஏஹே, கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள் தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள் அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவலெ மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான்
Writer(s): Vairamuthu, Manisharma Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out