Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Hariharan
Performer
Ilaiyaraaja
Performer
COMPOSITION & LYRICS
Vaasan
Songwriter
Lyrics
தென்றலைக் கண்டுகொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே?
தென்றலைக் கண்டுகொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே?
உள்ளத்தில் பார்வை உண்டு மானே
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே
நெஞ்சின் வண்ணங்களை, ஓடும் எண்ணங்களை
காண கண் வேண்டுமா
பேசச் சொல் வேண்டுமா
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே
தென்றலைக் கண்டுகொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே?
உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே
அந்த காதல் தென் குரல் கேட்டாயா
உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே
ஈர காத்து காதல் சொல்லக் கண்டாயா
உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய்
என்று நீ என் காதல் கண்டுகொள்வாய்?
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு
தென்றலைக் கண்டுகொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே?
உள்ளத்தில் பார்வை உண்டு மானே
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே
சோலை பூவனம் தேடும் பூவினம்
எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ
அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா
எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ
ஹோ சந்தன சந்திரனின் பாட்டு
சந்தங்கள் சொன்னதடி நேற்று
சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து
நீதானே என்னைத் தொட்ட காற்று
அதிகாலை மாலை இரவென்ன
அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன
என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய்?
தென்றலைக் கண்டுகொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே?
உள்ளத்தில் பார்வை உண்டு மானே
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே
நெஞ்சின் வண்ணங்களை, ஓடும் எண்ணங்களை
காண கண் வேண்டுமா
பேசச் சொல் வேண்டுமா
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே
தென்றலைக் கண்டுகொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே?
உள்ளத்தில் பார்வை உண்டு மானே
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே
Written by: Vaasan