Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
D. Imman
Performer
Haricharan
Performer
Umapathi
Actor
Reshma Rathore
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
Composer
Yugabharathi
Lyrics
Lyrics
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
இரு கண்ணுல மின்னல அள்ளி எறிஞ்சிட்டு ஓடுறா
நடு நெஞ்சுல நின்னவ தன்னை மறந்துட்டு ஆடுறா
மொத பார்வை அவ பாத்தா நான் ஆள் ஆனேன்
மறு பார்வை அவ பாத்தா நான் தூள் ஆனேன்
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
Cinema பாக்கல எதையும் கேக்கல
எனக்குள் என்ன நடந்தது ஒண்ணும் வெளங்கவில்ல
பொழுதும் வீட்டுல மழை தான் காட்டுல
அலையும் உள்ள அடிக்குது சொல்ல முடியவில்ல
அவ காதோர கம்மல் கொஞ்சம் அசைஞ்சாலே
கொட சாயும் என் நெஞ்ச நல்லா பிசைஞ்சாளே
இது பொய் இல்ல பொய் இல்ல நீ கேளு
அவ யாருன்னு கேக்காத என் ஆளு
மொத பார்வை அவ பாத்தா நான் ஆள் ஆனேன்
மறு பார்வை அவ பாத்தா நான் தூள் ஆனேன்
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
புயலா வீசுறேன் அளவா பேசுறேன்
அவளும் மெல்ல சிணுங்கிட என்னை புரிஞ்சிக்கிறேன்
பசிய நீங்குறேன் ருசியா தூங்குறேன்
எனக்கும் வெக்கம் வருமுன்னு இப்போ தெரிஞ்சிக்கறேன்
அவ லேசாக என்ன வெட்டி சரிச்சாளே
செம mass'ah க சுத்த விட்டு சிரிச்சாளே
அவ பேச்செல்லாம் பேச்சில்ல தாலாட்டு
உயிர் மூச்சோட சேர்ந்தாளே பூங்காத்து
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
இரு கண்ணுல மின்னல அள்ளி எறிஞ்சிட்டு ஓடுறா
நடு நெஞ்சுல நின்னவ தன்னை மறந்துட்டு ஆடுறா
மொத பார்வை அவ பாத்தா நான் ஆள் ஆனேன்
மறு பார்வை அவ பாத்தா நான் தூள் ஆனேன்
லேல-லேல-லேல-லே
லேல-லேல-லேல-லே
Written by: D. Imman, Premkumar Paramasivam, Yugabharathi

