Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Harish Raghavendra
Performer
COMPOSITION & LYRICS
Srikanth Deva
Composer
Na Muthukumar
Songwriter
Lyrics
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் வெண்மையடி
உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி
என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றேன்
விருட்சத்தை போல நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் பெயரை கேட்டாலே உன் பெயரை சொல்கின்றேன்
எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் உறைந்தாய்
எந்தன் நிழல் இன்று என்னை விட்டு விட்டு சென்று
உந்தன் பின்னே வந்து தொடர்கின்றது
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் வெண்மையடி
உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
Written by: Na Muthukumar, Srikanth Deva