Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Sadhana Sargam
Vocals
COMPOSITION & LYRICS
Deva
Composer
Lyrics
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய் I love you டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாய் I love you டா
தீராத உன் அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
உன்னை நானும் நினைப்பதை
யாரும் தடுக்கின்ற வேளை
துடிக்கும் இதயம் வேலை நிறுத்தம்
செய்கின்றதே உயிர் வலிகின்றதே
நீ தந்த ஒற்றை கடிதம்
ஆயிரம் முறை நான் படிப்பேனே
உனக்காக ஆயிரம் கடிதம்
ஒற்றை நொடியில் எழுதிடுவேனே
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
சத்யா
சொல்லுடி
எதுக்கு இப்படி பார்க்குற
நல்ல இருக்கியே
வெட்கமா இருக்கு
எனக்கு ஒரு மாதிரி இருக்கு
கிட்ட வராத
வருவேன்
வேண்டாம்
எனக்கு வேணும்
Please சத்யா
ஜன்னலின் வழியே வெண்ணிலவு
ஒளியை கசிக்கின்ற நேரம்
கட்டிலின் மேலே கவிதைகள் போல
நாம் வாழலாம் இனி நாம் வாழலாம்
என் மீது காலை போட்டு
தூங்கும் உன்னை ரசிப்பேனே
நான் உந்தன் காதை கடித்து
தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே
இது போலவே பல ஆசைகளே
உள்நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய் I love you டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுத்தாய் I love you டா
தீராத உன் அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக
சமர்பிக்கிறேன்...
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
சத்யா
உன் மதியால் என்(please)
மனதை நீதான் வசியம் செய்தாய்
சீ...
Written by: Deva, Vanamali


