Lyrics

என் ஜீவன் உனது குழலாகட்டும் கண்ணா என் ஜீவன் உனது குழலாகட்டும் கண்ணா நீ காட்டும் நாதம் என் வாழ்வாகட்டும் கண்ணா நீ காட்டும் நாதம் என் வாழ்வாகட்டும் கண்ணா கண்ணா கண்ணா கோகுலம் தன்னில் நீ ஆவினம் மேய்த்தால் நானும் ஓர் கன்றாய் நாடிடுவேன் உன்னை கோகுலம் தன்னில் நீ ஆவினம் மேய்த்தால் நானும் ஓர் கன்றாய் நாடிடுவேன் உன்னை உன் தேவகானம் தன்னில் முழ்கி நாளும் என் வாழ்க்கை செல்லும் யமுனையின் ஓரம் உன் தேவகானம் தன்னில் முழ்கி நாளும் என் வாழ்க்கை செல்லும் யமுனையின் ஓரம் என் ஜீவன் உனது குழலாகட்டும் கண்ணா நீ காட்டும் நாதம் என் வாழ்வாகட்டும் கண்ணா கண்ணா கண்ணா கோபியர் சூழும் பூம்பொழில் தன்னில் மென்காற்று உந்தன் இன்னிசை ஏந்தும் கோபியர் சூழும் பூம்பொழில் தன்னில் மென்காற்று உந்தன் இன்னிசை ஏந்தும் மானினமாக நான் அங்கு வந்து உன் பாட்டைக் கேட்டு உன்மத்தம் ஆவேன் மானினமாக நான் அங்கு வந்து உன் பாட்டைக் கேட்டு உன்மத்தம் ஆவேன் என் ஜீவன் உனது குழலாகட்டும் கண்ணா நீ காட்டும் நாதம் என் வாழ்வாகட்டும் கண்ணா கண்ணா கண்ணா ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னாலும் மோகன ரூபனின் லீலைகள் வாழும் ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னாலும் மோஹன ரூபனின் லீலைகள் வாழும் என் பாடல் என்றும் அவன் பெயரைச் சொல்லும் அவன் சென்ற பாதை தன்னில் உள்ளம் செல்லும் என் பாடல் என்றும் அவன் பெயரைச் சொல்லும் அவன் சென்ற பாதை தன்னில் உள்ளம் செல்லும் என் ஜீவன் உனது குழலாகட்டும் கண்ணா நீ காட்டும் நாதம் என் வாழ்வாகட்டும் கண்ணா கண்ணா கண்ணா
Writer(s): Sivaranjan Sivaranjan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out