Credits
PERFORMING ARTISTS
Srinivas
Vocals
Sujatha
Vocals
A.R. Rahman
Lead Vocals
Kabita Krishnamurti
Vocals
Vairamuthu
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vairamuthu
Songwriter
Lyrics
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரேயே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரேயே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு
என்னை சேர விடு
இல்லை சாக விடு
சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ
கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளைவிடுமே
கண் பார்வை முதல் நிலையே
ஆருயிரே என்னுயிரே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில்
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கண்டதோ
என்னுயிரே என்னுயிரே
உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அறிந்து விட்டேன்
என் நருமலரே உன்னை தொழுது விட்டேன்
என் சுய நிலை என்பதை இழந்து விட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்
கண்கள் தாண்டி போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இது வரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே
என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை நான் உன் கையில் நீா்த்திவலை
என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை நான் உன் கையில் நீா்த்திவலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இதுமோசமில்லை ஒரு முக்தி நிலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இதுமோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை
என்னுயிரே என்னுயிரே
என் ஆருயிரேயே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே
என் ஆருயிரேயே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ
இந்த காதலில் மரணம் தான் ஏழு நிலை
இது இல்லையென்றால் அது தெய்வீக காதல் இல்லை
இந்த காதலில் மரணம் ஏழு நிலை
இது இல்லையென்றால் அது காதல் இல்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை மரிப்பதில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
என் ஆருயிரே என் ஓருயிரே
Written by: A. R. Rahman, Vairamuthu