Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
V. Selvaganesh
Performer
Karthik
Performer
Chinmayi Sripada
Performer
Viishnu
Actor
Ramya Nambeesan
Actor
COMPOSITION & LYRICS
V. Selvaganesh
Composer
Na. Muthukumar
Lyrics
PRODUCTION & ENGINEERING
Darshan Creations
Producer
Lyrics
விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே
விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
நடந்து போகையில் பறக்குது மனது
துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இது வரை எனக்கு இது போல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் முன் போல் இல்லை
புதிதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே
சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
இது என்ன கனவா நிஜமா
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன பகலா இரவா
நிலவின் அருகினில் சூரிய வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே
விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே
விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் (விழிகளிலே)
யார் தந்தார் (விழிகளிலே)
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார் (அருகினிலே வருகையிலே)
புது புது தயக்கம் யார் தந்தார்
Written by: Na. Muthukumar, V. Selvaganesh


