Letra

Apple பெண்ணே நீ யாரோ... ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ... கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ Apple பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ பாதி கனவில் மறையும் பறவை யா... ரோ... என்னை நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி பெண்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்தடி அங்கேயே நின்று கொண்டு என் உயிர் ஏங்குதடி மின்னலை கண்டு கண்கள் மூடி கண்களை திறந்தேன் காணவில்லை மின்னல் ஒளியை கையில் கொள்ள அய்யோ அய்யோ வசதியில்லை என்னை நோக்கி சிந்திய மழை துளி எங்கே விழுந்தது தெரியவில்லை எந்த சிற்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவல் இல்லை அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன் ஆகயத்தின் மறுப்பக்கம் சென்றால் கூட விடமாட்டேன் உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளைத் தொழமாட்டேன் எங்கோ ஓர் சாலை வளைவில் உன் வின்பம் தொலைந்தடி அங்கேயே நின்று கொண்டு என் உயிர் ஏங்குதடி Apple பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தல் love you love you சொல்வாயா பாவம் அய்யோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா உலகின் விளிம்பில் நீயிருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா உயிரை திருகி கையில் தந்தால் Okay என்று சொல்வாயா ஆமாம் என்று சொல்லி விட்டால் ஆண்டுகள் நூறு உயிர் தரிப்பேன் இல்லை என்று சொல்லி விட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன் நான் இன்னோரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன் எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி அங்கேயே நின்று கொண்டு என் உயிர் ஏங்குதடி Apple பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ பாதி கனவில் மறையும் பறவை யா... ரோ...
Writer(s): Vairamuthu, Ramani Bharadwaj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out