Letra

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் செம்பருத்தி பூவே ... பூ என்ன சொல்லுமென்று காற்றறியும் காற்றென்ன சொல்லுமென்று பூவரியும் நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தான் அறியும் வானவில் என்ன சொல்ல வந்ததென்று மேகமே உனக்கென்ன தெரியாதா அல்லி பூ மலர்ந்தது ஏனென்று வெண்ணிலவே உனக்கென்ன தெரியாத ஓஹோ வலியா சுகமா தெரியவில்லை சிறகா சிறையா புரியவில்லை அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் செம்பருத்தி பூவே ... ஜன்னலில் தெரியும் நிலவுடனே சண்டை போட்டது நினைவில்லையா மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை சொல்லியது நினைவில்லையா என்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும் கவிதை எழுதிய நினைவில்லையா எழுதும் கவிதையை எவர் கண்ணும் காணும் முன்பு கிழித்து நினைவில்லையா ஓஹோ இரவில் இரவில் கனவில்லையா கனவும் கனவாய் நினைவில்லையா அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் செம்பருத்தி பூவே ...
Writer(s): Deva Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out