Créditos

ARTISTAS INTÉRPRETES
Pradeep Kumar
Pradeep Kumar
Canto
COMPOSICIÓN Y LETRA
Pradeep Kumar
Pradeep Kumar
Composición
Kaber Vasuki
Kaber Vasuki
Letra

Letra

பிரிவிலே பிரிவிலே ஏக்கம்
காத்திருக்கும் கனவுகள்
நெஞ்சம் மெல்ல நம்பி போகும் அங்கே
கண்முன் குவியும் நினைவுகள்
குவிய குவிய காணும் குவியம் மாறுதே
குவுயம் மாற காணும் காட்சி மாறுதே
காட்சி மாற மாற உணர்வு மாறுதே
காலம் ஓட ஓட நினைவில் புழுவும் ஊறுதே
பாச கயிறு ஒரு Rubber Band'உ
இழுக்க இழுக்க இருக்கி பிடிக்குதே
பாச கயிறு ஒரு பள்ளி வாலு
விழுந்த பின்னும் மீண்டும் மீண்டும் முளைக்குதே
பாச கயிறு ஒரு சங்கிலி பூட்டு
கைய கால கட்டி போடுதே
பாச கயிறு ஒரு ஈர நோட்டு
நினைவுகள் ஒழுகி ஓடுதே
சொட்ட சொட்ட காணும் கோணம் மாறுதே
கோணம் மாற மாற காட்சி மாறுதே
காட்சி மாற மாற உள்ளம் மாறுதே
காலம் ஓட ஓட நினைவில் பூக்கள் பூக்குதே
நிகழ்வது நிஜம்
நினைவதன் நிழல்
நிஜம் என்னை சுட
நிழல் தரும் இதம்
நிகழ்வது நிஜம்
நினைவதன் நிழல்
நிஜம் என்னை சுட
நிழல் தரும் இதம்
நிகழ்வது நிஜம் (நிஜம்)
நினைவதன் நிழல் (நிழல்)
நிஜம் என்னை சுட (சுட)
நிழல் தரும் இதம் (இதம்)
Written by: Kaber Vasuki, Pradeep Kumar
instagramSharePathic_arrow_out

Loading...