Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Ilaiyaraaja
Interprète
Mano
Interprète
P. Susheela
Interprète
Ramarajan
Interprétation
Gouthami
Interprétation
COMPOSITION ET PAROLES
Ilaiyaraaja
Composition
Gangai Amaran
Paroles
Paroles
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வைக்க
வா பூவாயி
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வைக்க
வா பூவாயி
ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்ச
வா என் தாயி
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வைக்க
வா பூவாயி
கண்ணுதான் தூங்கவில்ல
காரணம் தோணவில்ல
பொண்ணு நீ ஜாதி முல்ல
பூமாலை ஆகவில்ல
கன்னி நீ நாத்து
கண்ணன் நான் காத்து
வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை
நான் வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
உன்னக்காக நான் காத்திருக்கேன்
பதில் கூறு பூவாயி
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வைக்க
வா பூவாயி
ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்ச
வா என் தாயி
சொந்தமா பாடுங்கிளி
சோகமா போனதய்யா
உள்ளம் தான் நொந்து நொந்து
ஊமையா ஆனதய்யா
கண்ணுல நீரு காரணம் யாரு
கன்னி நான் கூறவா
ஒத்தமரம் போல
நான் நிக்கும் இந்த வேளை
என்ன சொல்லி பாட
என் துன்பம் எல்லை மீற
தொடராது இது இனி மேலே
துன்ன நான் தான் பூவாயி
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
நானா பாடலையே
நீ தான் பாட வச்ச
ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
Written by: Gangai Amaran, Ilaiyaraaja


