Crediti

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Pradeep Kumar
Pradeep Kumar
Performer
Jonita Gandhi
Jonita Gandhi
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Madhan Karky
Madhan Karky
Songwriter

Testi

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா சலனமா மரணமா
தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணாமல் போனாய்
யாரடி யாரடி
நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர்
காரணம் கூறடி
யாரடி யாரடி
பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம்
ஊறுதா பாரடி
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதயுமில்லை உரமும்மில்லை மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா
இது வரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா
ஜென்மம் உண்மை இல்லை
உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம்
நினைவென நிறைந்தாய்
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
தனிமையும் நானும்
மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே
ஆஅ... ஆ... சுரங்கத்தை போலே
என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே
உனை காணா உலகத்தில்
எதுவும் மெய்யில்லை
உலகெல்லாம் பொய் இந்த
காதல் பொய் இல்லை
யாரடி, ஹா...
யாரடி, ஹா...
நான் இனி யாரடி, ஹா...
ஓர் துளி, ஹோ...
ஞாபகம், ஹோ...
ஊறுதா பாரடி, ஹா...
யாரடா யாரடா
நீ என்னுள் யாரடா
பேரலை போலே நீ
பாய்கிறாய் பாரடா
மறந்தாயே மறந்தாயே...
Written by: D. Imman, Madhan Karky, Madhan Karky Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...