가사
கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்
கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்
விண்மீன்கள் தங்கி செல்லும் வீடு
வெண் இறகில் கட்டி வைத்த கூடு இது
உன்னாலே உன்னாலே
இன்றானது இருள் வாழும் காடு
அன்பில் நீ என்னை சூழ்ந்த கங்கை
அந்நதியில் மூச்சடைத்த என் வாழக்கை இனி
எந்நாளும் உன்னாலே
நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை
இது கனவாய் மாறி நீ வருவாய்
என தினம் தினம் விழிப்போம் உனக்கெனவே
அது வரை இவ்வாழ்வு அடர்வனமே
இனி எப்போது இப்பூமி
உயிர் பெறுமோ சொல்
கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்
Written by: Ghibran, Ramkumar


