뮤직 비디오
뮤직 비디오
크레딧
실연 아티스트
Vijay Yesudas
리드 보컬
R. P. Patnaik
실연자
Palani Bharathi
실연자
Stan & Sam
리믹서
작곡 및 작사
R. P. Patnaik
작곡가
Palani Bharathi
작사가 겸 작곡가
프로덕션 및 엔지니어링
Stan & Sam
믹싱 엔지니어
가사
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
மூச்சிலே புது வாசனை
இது ஏனம்மா?
இளைய மனதில் காதல் புகுந்த நேரமா?
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
சாரல் விழும் நேரம் வானவில்லை போலே
தோன்றிடும் அழகான காதல்
ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும்
இளமையின் சங்கீதம் காதல்
ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக
இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா?
பழகு பாதம் பார்த்து அவன் சுப்ரபாதம் பாட
சிணுங்கும் கொலுசு சுருதி சேர்க்குமா?
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி
வைத்தது நெஞ்சோடு இன்று
தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்
கலந்தது மூச்சோடு இன்று
காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை
அதை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
மூச்சிலே புது வாசனை
இது ஏனம்மா?
இளைய மனதில் காதல் புகுந்த நேரமா?
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
Written by: Palani Bharathi, R. P. Patnaik