Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Sid Sriram
Lead Vocals
Yuvan Shankar Raja
Performer
Yugabharathi
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Yugabharathi
Songwriter
Tekst Utworu
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன
முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பால் முகம்
பகல் இரவையும் மாற்றுவதென்ன
பசுந்தளிரென ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே
தேன் மழை
தினம் தினம் எனை தீண்டுவதென்ன
திசை மறந்திட தூண்டுவதென்ன
கதிர் ஒளி அவள் வார்த்தையே
பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை பார்த்திட
பூத்தவள் என் மகளே
கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே
மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே
உன் கை விரலே ஒரு தூரிகையாய்
தீட்டிடுதே என்னை ஓவியமாய்
உன் இதழ்கள் பேசிடும் பேச்சை
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்
இது போதும் இது போதும் என் மகளே
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன
முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ! என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பெண்ணாலே! பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை பார்த்திட
பூத்தவள் என் மகளே!
கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே! உறைவது என்ன காலங்களே
Written by: Yugabharathi, Yuvan Shankar Raja
