Видео

В составе

Создатели

ИСПОЛНИТЕЛИ
Hariharan
Hariharan
Вокал
Ajith
Ajith
Актер/актриса
Suvalakshmi
Suvalakshmi
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Deva
Deva
Композитор
Vaali
Vaali
Тексты песен

Слова

கொஞ்ச நாள் பொறு தலைவா! ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா! கண்ணிரண்டில் போர் தொடுப்பா! அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா! ஏஏஏய்! கொஞ்ச நாள் பொறு தலைவா! ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா! கண்ணிரண்டில் போர் தொடுப்பா! அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா! காமாட்சி மீனாட்சி என்ன பேரோ? நான் அறிய தென்னாடோ? என்னாடோ? எந்த ஊரோ? நான் அறிய ராசாத்தி ராசாத்தி address என்ன? கண்டுபிடி ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready (ஹ-ஹ-ஹ-ஹ) ஓ நேத்து கூட தூக்கத்தில பார்த்தேன் அந்த பூங்குயில! தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்து வச்ச மாலை போல! வேர்த்து கொட்டி கண் முழுச்சு பார்த்தா அவ ஓடிப் போனா உச்சிமல காத்தா! சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா! சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா! வத்திக் குச்சி இல்லாமலே காதல் தீய பத்த வைப்பா! தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள! தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள ராசாத்தி ராசாத்தி address என்ன? கண்டுபிடி ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க வச்ச கண்ணு வாங்கலையே! ஏன் மாமன் கண்ணு தூங்கலையே! (ஹ-ஹ-ஹ-ஹ) என்னோடு தான் கண்ணாமூச்சி ஒ-ஒ-ஹோய் என்றும் ஆடும் பட்டாம்பூச்சி கட்டாயம் என் காதல் ஆட்சி கை குடுப்பா தென்றல் சாட்சி சிந்தனையில் வந்து வந்து போனா! அவ சந்தனத்தில் செஞ்சு வச்ச தேனா? என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா என்னம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா! வேரு ஒருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா? ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக? ஆவாரம் பூவாக வாய்வடிச்ச முத்தழக! ராசாத்தி ராசாத்தி address என்ன? கண்டுபிடி ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready கொஞ்ச நாள் பொறு தலைவா! ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா! கண்ணிரண்டில் போர் தொடுப்பா! அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா! அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ? நான் அறிய தென்னாடோ? என்னாடோ? எந்த ஊரோ? நான் அறிய ராசாத்தி ராசாத்தி address என்ன? கண்டுபிடி ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
Writer(s): Deva, Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out