Credits

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Karky
Karky
Performer
COMPOSITION & LYRICS
N.R. Raghunanthan
N.R. Raghunanthan
Composer
Karky
Karky
Songwriter

Lyrics

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தாய்
உடன் யாரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்
எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே
உனக்கென செதுக்கிய நினைவுகள்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே
எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே
கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
ரெக்கை விாித்தேன்
ரெக்கை விாித்தேன்
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தாய்
பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே
இரவிலே தூக்கம் தொலைந்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே
கட்டம் போட்ட ஒன்றா? - இல்லை
கோடு போட்ட ஒன்றா?
எந்தச் சட்டைப் போட? - என
முட்டிக்கொண்டேன் உன்னாலே
பச்சை வண்ணப் பொட்டா - இல்லை
மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டும் - நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே
கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே
காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே
சாலை ஓரத் தேநீர் - அது
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேரும் போதும் - இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே
பாறை மேலே ஏறி - நம்
பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற - இனி
அச்சம் ஏதும் வேண்டாமே
கண்களில் மின்னிடும் காதலை... நீ
அன்றே கண்டாய் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நானே சொன்னேன் மறுமுறை
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தாய்
இனி இனி - தனித்தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி - மனதினில் தேக்கிட
காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே
ஓரக் கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே
கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நானே சொன்னேன் மறுமுறை
Written by: Karky, N.R. Raghunanthan
instagramSharePathic_arrow_out

Loading...