album cover
Inayae (From "Thadam")
album cover
Inayae (From "Thadam") was released on May 12, 2018 by Saregama as a part of the album Inayae (From "Thadam") - Single
BPM91
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி
அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேநீரில் தேன் கூடுமே
இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது என்னடா
யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே
மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே
காதல் காமமாய் உருக்கொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே
உடல் மேல் பூக்கும் நீரோடு நீராடியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்
எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்
இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேநீரில் தேன் கூடுமே
இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
யுகமாய் உன் விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி
இணையே
Written by: Arun Raj, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...