Lyrics

கனிமொழியே என்னை கொன்று போகிறாய் கடை விழியால் என்னை தின்று போகிறாய் கனிமொழியே என்னை கொன்று போகிறாய் கடை விழியால் என்னை தின்று போகிறாய் இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய் இமைகள் பறித்து என்னை தூங்க சொல்கிறாய் ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய் மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய் நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால் நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன் அடி உந்தன் கன்னக் குழியில் என்னை புதைத்து வைத்தால் மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன் ஒரு கள்ளப் பார்வை பார் அழகே (ஒரு கள்ளப் பார்வை பார் அழகே) சிறு காதல் பேசும் ஊமை கிளியே (சிறு காதல் பேசும் ஊமை கிளியே) நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன் முருவல்தான் கேட்கிறேன் கனிமொழியே ம்ம்ம்ம்ம் கடைவிழியால் ம்ம்ம்ம்ம் பறவை பறக்கும் போது ஆகாயம் தொலைந்து போகும் பார்வை பறவை மீதே பதிந்திருக்கும் விழி உன்னை காணும் போது உலகம் தொலைந்து போகும் என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும் என்னை கட்டி போடும் காந்தச்சிமிலே ஆ ஆ ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே ஆ அ என் காலை கனவின் ஈரம் நீதானே வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை வாழ்க்கையை தொட்டு வை கனிமொழியே கனிமொழியே என்னை கொன்று போகிறாய் கடை விழியால் கடை விழியால் என்னை தின்று போகிறாய் இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய் இமைகள் பறித்து என்னை தூங்க சொல்கிறாய் ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய் மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய் நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா ஹுஹுஹு ஹோ ஓ ஓஒ ஓஒ
Writer(s): Vairamuthu, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out