album cover
Aararo
1,096
Indian Pop
Aararo was released on February 14, 2020 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Anthony Daasan Folk Songs : Series 1
album cover
Release DateFebruary 14, 2020
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM105

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anthony Daasan
Anthony Daasan
Performer
COMPOSITION & LYRICS
Anthony Daasan
Anthony Daasan
Composer
Mohanrajan
Mohanrajan
Lyrics

Lyrics

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு
நீ தூங்க பாடலடா
நீ முழிக்க பாடுறேண்டா
வம்புதும்பு வச்சுக்காத
கோழையாவும் வாழ்ந்திடாத
கூட்டு சேர்ந்து கெட்டுடாத
கைய கட்டி நின்னுடதா
அப்பன் சொல்ல மீறிடாத
ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு
நாலு எழுத்து கத்துக்கடா
நாலு திசை போயி வாடா
நாணயத்தை கத்துக்கிட்டு
நாலு காசு சேத்துக்கடா
ஊரு என்ன சொல்லுமுன்னு
எப்போதும் நீ வாழ்ந்திடதா
ஊருக்கென்ன செய்யணுன்னு
யோசிக்க நீ மறந்திடாத
பாசத்த அதிகம் வெச்சா
பைத்தியமா ஆகிடுவ
பாசமே இல்லையின்னா
பரதேசி ஆகிடுவ
அளவா இருந்துக்கடா
அழகா வாழ்ந்துக்கடா
கவலையை வென்றிடடா
கஷ்ட்டபட கத்துக்கடா
அப்பன் சொன்னா ஒத்துக்கடா
ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு
அம்மாவோட பாசத்த
புரிஞ்சுக்க சில மாசம்
அண்ணன் தம்பி பாசத்த
தெரிஞ்சிக்க சில வருஷம்
சொந்தத்தோட பாசத்த
புரிஞ்சிக்க சில கஷ்டம்
கூட்டாளி பாசத்த
தெரிஞ்சிக்க சில நஷ்டம்
அவரவர் பாசத்த
அப்பப்போ புரிஞ்சிப்ப
அப்பனோட பாசத்த
அப்பான்னாகி தெரிஞ்சிப்ப
வேர்வைய தாய்ப்பால
கொடுப்பவன் அப்பனடா
கோவத்துல பாசத்த
காட்டுறவன் அப்பனடா
இப்ப சொன்ன எல்லாமே
வார்த்தையில்லை தெரிஞ்சிக்க
அப்பன் வாழ்க்கையின்னு புரிஞ்சிக்க
ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு
நீ தூங்க பாடலடா
நீ முழிக்க பாடுறேண்டா
வம்புதும்பு வச்சுக்காத
கோழையாவும் வாழ்ந்திடாத
கூட்டு சேர்ந்து கெட்டுடாத
கைய கட்டி நின்னுடதா
அப்பன் சொல்ல மீறிடாத
ஆராரோ ஆரிராரோ
அப்பனோட தாலாட்டு
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
Written by: Anthony Daasan, Mohanrajan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...