Credits
PERFORMING ARTISTS
Rakshita
Lead Vocals
PRODUCTION & ENGINEERING
S. Jaykumar
Producer
Lyrics
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
என் இச்சை எல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே
(பச்சை மயில் வாஹனனே)
(சிவ பாலசுப்ரமண்யனே வா)
(என் இச்சை எல்லாம் உன்மேலே வைத்தேன்)
(எள்ளளவும் பயமில்லையே)
அலைகடல் ஓரத்திலே
எங்கள் அன்பான ஷண்முகனே
அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
(அலைகடல் ஓரத்திலே)
(எங்கள் அன்பான ஷண்முகனே)
(அலையா மனம் தந்தாய்)
(உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்)
கொச்சை மொழியானாலும்
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா
எங்கும் சாந்தி நிலவுதப்பா
(கொச்சை மொழியானாலும்)
(உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்)
(இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா)
(எங்கும் ஷாந்தி நிலவுதப்பா)
வெள்ளம் அது பள்ளம் தனிலே
பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே
நீ மெல்ல மெல்ல புகுந்து விட்டாய்
எங்கள் கள்ளம் எல்லாம் கரைந்ததப்பா
(வெள்ளம் அது பள்ளம் தனிலே)
(பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே)
(நீ மெல்ல மெல்ல புகுந்து விட்டாய்)
(எங்கள் கள்ளம் எல்லாம் கரைந்ததப்பா)
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன்
அதில் நேர்மை எனும் தீபம் வைத்தேன்
செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா
முருகா சேவற் கொடி மயில் வீரா
(நெஞ்சமதில் கோவில் அமைத்தேன்)
(அதில் நேர்மை எனும் தீபம் வைத்தேன்)
(செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா)
(முருகா சேவற் கொடி மயில் வீரா)
செந்தூர் கடலோரம் முருகா
சிங்கார மயில் வாகனா
செந்தூர பொட்டழகா
உந்தன் சேவடியில் நான் சரணம்
(செந்தூர் கடலோரம் முருகா)
(சிங்கார மயில் வாகனா)
(செந்தூர பொட்டழகா)
(உந்தன் சேவடியில் நான் சரணம்)
(சேவடியில் நான் சரணம்)
(முருகா சேவடியில் நான் சரணம்)
Written by: Traditional

