Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Kamal Haasan
Kamal Haasan
Actor
Gauthami
Gauthami
Actor
Rupini
Rupini
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Kavignar Vaali
Kavignar Vaali
Songwriter

Lyrics

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
ஆசை வந்து என்னை
ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன்
குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம்
உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம்
மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
கண்ணிரண்டில் நான் தான்
காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன்
அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும்
நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
Written by: Ilaiyaraaja, Kavignar Vaali, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...