album cover
Athi Athikka (From "Aathi")
album cover
Athi Athikka (From "Aathi") was released on January 15, 2006 by Ayngaran as a part of the album Aathi (Original Motion Picture Soundtrack) - EP
ReleasedJanuary 15, 2006
LabelAyngaran
BPM150
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
நாங்கலெல்லாம் ஓருயிர்தான்
நடந்துவந்தால் ஓர்நிழல்தான்
நாம் சிரித்தால் மெல்லிசைதான்
அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்
திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்
எட்டும் கிளையிலே அணில்களாய் திரிகிறோம்
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்
தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை
வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை
ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ
அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்
கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்
அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான்
உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்
கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்
நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் தாழம் பூக்கள்
பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ
அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
நாங்கலெல்லாம் ஓருயிர்தான்
நடந்துவந்தால் ஓர்நிழல்தான்
நாம் சிரித்தால் மெல்லிசைதான்
அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
Written by: Pa Vijay, Vidyasagar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...