Music Video

Partha Mudhal - HD Video Song | Vettaiyaadu Vilaiyaadu | Kamal Hassan | GVM | Harris Jayaraj
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Bombay Jayashri
Bombay Jayashri
Lead Vocals
Unni Menon
Unni Menon
Lead Vocals
Thamarai
Thamarai
Performer
Jyothika
Jyothika
Actor
Kamal Haasan
Kamal Haasan
Actor
Kamalinee Mukherjee
Kamalinee Mukherjee
Actor
Prakash Raj
Prakash Raj
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Thamarai
Thamarai
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Lyrics

பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன் காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதும் உன் முகமே எனை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன் உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் போகின்றேன் என நீ பலநூறு முறைகள் விடைபெற்றும் போகாமல் இருப்பாய் சரியென்று சரியென்று உனை போக சொல்லி கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன் உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் தூக்கம் மறந்து நான் உனை பார்க்கும் காட்சி கனவாக வந்ததென்று நினைத்தேன் யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறுவீடு கட்டிக்கொள்ள தோன்றும் நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும் கண்பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
Writer(s): Harris Jayaraj J, Thamarai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out