Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Performer
Prasanna Ramasamy
Prasanna Ramasamy
Performer
COMPOSITION & LYRICS
Prasanna Ramasamy
Prasanna Ramasamy
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா... ஆ... ஆ கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா... ஆ... ஆ தீண்டிடுமா
மன கதவு திறந்திடுமா மோதி நானும் பார்க்கிறேன்
பழகிடுமா விலகிடுமா கனவிலும் நினைவிலும்
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா... ஆ... ஆ கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா... ஆ... ஆ தீண்டிடுமா
கல்யாணம் காட்சி குடும்பம்னு சந்தோசமா இருக்க வேணாமா டா...
முதல்முறை மழைமேகம் எந்தன் வாசல் மேலே
மனம் இன்று ஈரமாகி பாரமாகுதே
இதழ்வரை வரும்வார்தை உந்தன் பார்வையாலே
இடம்விட்டு தடம்மாறி தூரம் போகுதே
தனிமையில் தீயினை தீண்டி தீண்டி நானும்
காயத்தோடு வாடும் நேரத்தில் விழிகளில் வரமென
எதிரில் நீயும் வந்தாய் வாழதோன்றுதே
உன் முகம் பார்க்கையில் கண்ணிலே
தாய் முகம் வருவது ஏனடி
உன்னிடம் என்ன நான் வேண்டுகிறேன்
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா... ஆ... ஆ கேட்டிடுமா
லாயே லாயோ... லாயே லாயோ...
தொடாமலே தொட்டு பேசும் மூச்சுகாற்றின் வாசம்
விடாமலே என்னை இன்று கூறுபோடுதே
படாமலே பட்டுபோகும் பட்டு போன்ற கேசம்
எழாமலே என்னை வீழ்த்தி வென்றுபோகுதே
உறவுகள் பிரிவேன வாழ்ந்து வந்தபோது
வானவில்லை காட்டிபோகிறாய் எரிமலை நடுவினில்
பனியை போல வந்து வீசிபோகிறாய்
உனக்கென தந்திட என்னிடம்
உயர்ந்தது எதுவும் இல்லையே
உயிரையே தருகிறேன் கண்மனியே
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா... ஆ... ஆ கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா... ஆ... ஆ தீண்டிடுமா
Written by: Na Muthukumar, Prasanna Ramasamy
instagramSharePathic_arrow_out

Loading...