Music Video

Credits

PERFORMING ARTISTS
P. Unnikrishnan
P. Unnikrishnan
Performer
Sujatha
Sujatha
Performer
Dhanush
Dhanush
Actor
COMPOSITION & LYRICS
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன் புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் இளவேனில் வரை நான் இருக்கின்றேன் முகமூடி அணிகின்ற உலகிது உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது நதி நீரிலே அட விழுந்தாலுமே அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீதான் தலை கோத வந்தால் உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை ஒரு பார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out