Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Sujatha
Sujatha
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
The Legend SPB
The Legend SPB
Lead Vocals
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

ஆ...
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
ஆ...
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
இந்த வார்த்தைக்கு ஒருவித அர்த்தம் இல்லாதது காதல்
இரு பார்வைகள் மௌனத்தி ல் பேசுகின்ற மொழி காதல்
இங்கு கீழ்த்திசை சூரியன் மேல் திசை தோன்றினும்
பாதை மாறிப் போகாது காதல் காதல் காதல் காதல்
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும் ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்
எல்லோர்க்கும் காதல் வரும் என்றாலும் கல்யாண வைப்தோகம் சில பேர்க்கு தான்
காதலன் காதலி தோற்பதுண்டு காதல்கள் எப்பவும் தோற்பதில்லை
ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு இன்னொரு உறவினை ஏற்பதில்லை
நிறம் மாறிப் போகாமல் சுரம் மாறிப் போகாமல்
உயிர் பாடும் ஒரு பாடல் தான் காதல் காதல் காதல் காதல்
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது
புயல் காற்று அடித்தாலும் அணையாதது
புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது
நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யார் என்று எழுதி வைத்தார்
நடக்கட்டும் திருமணம் நல்ல படி இன்னொரு பெண் மனம் வாழ்த்தும் படி
ஒரு ஜென்மம் போனாலும்
ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும்
ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும்
தொடர்கின்ற கதை தான் அம்மா காதல் காதல் காதல் காதல்
ஆ...
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
ஆ...
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
Written by: Deva, Deva Ind, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...