album cover
Anbulla Appa
3,912
Tamil
Anbulla Appa was released on August 7, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Sigaram Thodu (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateAugust 7, 2014
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
K. J. Yesudas
K. J. Yesudas
Performer
Vikram Prabhu
Vikram Prabhu
Actor
Monal Gajjar
Monal Gajjar
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கெது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீதானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
மாதக்கணக்கில் தாயும் சுமந்து
வந்ததுதான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிக்கும் உனக்கில்லை நிகரே
தூசி எனை தொடவும் விடமாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
தோழன் என நீ தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து
புன்னகையை எனக்கென தருவாய்
கண்ணிமையில் எனை நீ அடைகாத்து
தூங்கிடவும் மறப்பாய் எனை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கெது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீதானே உண்மையிலே
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...