Top Songs By Vijay
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Vijay
Performer
Shreya Ghoshal
Performer
COMPOSITION & LYRICS
Vairamuthu
Songwriter
Lyrics
ம்...
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
ஹே கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாறேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தாறேன்டி
முத்தம் தரீயா... ஒஹோ...
(ஓ...)
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா
அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலகோயில் யானை வந்து
அல்வாவை தின்பது போல்
என் ஆச உன்ன தின்னட்டுமே
ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அடிக்குது
நெத்திகுள்ள துடிக்குது
வெள்ள முடி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொல நடுங்குது
சின்ன சின்ன பொய்யும் பேசுற...
ஜிவ்வுனுதான் சூடும் ஏத்துற
நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரனே
நீ தேயாத நாட்டு கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற
என்ன செய்ய நினைக்குற
அம்பு விட்டு ஆள அடிக்குற...
தும்பை விட்டு வாலை பிடிக்குற
தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே
எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா...
கண்டாங்கி கண்டாங்கி
ஹும்… ஹும்…
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
Written by: Vairamuthu