歌词
சீரடி பாபா எங்கள் நாதா
சரணாகதி உன் திருப்பாதங்களில்
கலியுக வாழ்க்கையிலே உறுதுணையாய் இருப்பாய்
நல்வழி காட்டி எம்மை வாழ்க்கையில் உயர செய்வாய்
அவதாரம் எடுத்தாயே எங்களை காத்திடவே
விதியனக் கலங்காமல் கதியென காலடியை
பாபா உன் ஆலயத்தில் பதித்தோம் சீரடியில்
நடப்பவை எல்லாமே அறிவாய் நீயே
தாயாய் தயை செய்வாய் எங்கள் குருநாதா
வரும் துன்பம் யாவும் அது தரும் பாடம்
உண்மை உணர வைத்தாய் எங்கள் குருநாதா
மனதினில் சோகம் மறைந்தே போகும்
எது வந்த போதும் சாயி நாமம் போதும்
உறவுகள் போல் இங்கு உறுதுணை ஏது
அன்பெனும் அமிர்தமே பகிர்ந்திடும் போது
ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து
உயர்வாய் வாழ்ந்திட உரைத்தவர் பாபா
நினைத்தது போல் இங்கு நடந்திடக் கண்டேன்
அனைத்தும் கிடைத்தது அவனருள் என்பேன்
சிந்தையில் பிறந்தது சிகரத்தை அடைந்தது
அதரமும் சொன்னது அருளொளி பாபா
இருளதை போக்கியே வெளிச்சமும் காட்டும்
அருளொளி கூட்டியே பாதைகள் காட்டும்
சிந்தனை செயலும் பக்தியில் நிறைந்தால்
வந்துனை காப்பார் சீரடி பாபா
இம்மையில் பாபாவை பற்றிடல் போதும்
ஜென்மங்கள் ஆயிரம் அதுதரும் யோகம்
பாபாவின் கருணையில் நனைவது யோகம்
நாளும் அவர் புகழ் பாடுதல் போதும்
சன்னதியில் நாளும் சமைத்திடும் போது
சுவையும் சுகமும் உணவதில் கூடும்
பசியதை போக்கிட பகிர்ந்திடும் போதில்
தானமும் அதுவே தர்மமும் ஆகும்
விதிதரும் வேதனை பனியாய் விலகிடும்
பக்தியில் உருகிட பிணியும் பறந்திடும்
நடப்பவை யாவும் நலமே நாளும்
சத்குரு நாமம் கவசமும் ஆகும்
ஒரு வழியும் இன்றி தனி மரமாய் நின்றால்
குருவும் தான் அங்கு துணையாய் வருவார்
பொறுமையாய் இருந்து காத்திடல் வேண்டும்
சாயிராம் என்று சொல்ல நம்பிக்கை கூடும்
Written by: P.G. Ragesh, Sankar Hasan