制作
出演艺人
Dr. R. Balaji
表演者
P.G. Ragesh
表演者
作曲和作词
P.G. Ragesh
作曲
Sri Devi Prasad
词曲作者
歌词
வானத்தில அமாவாச..
பூமியில...பௌர்ணமி..(2)
முழு நெலா போல்முகத்துக் காரி !
முத்தழகி அங்காளி தாயி !
ஊஞ்சலாட வந்துருக்கா..
மலையனூர் மண்ணிறங்கி..! (2)
எங்க குலம் காக்க வந்த தேவி !
தங்க மனம் கொண்ட நம்ம தாயி !
கோரஸ்:
அங்காளம்மா ! அங்காளம்மா ! தாலேலோ !
செங்காளம்மா ! செங்காளம்மா ! தாலேலோ ! (2)
சரணம் 1
-----------
மலையனூரு எல்லையில..
ஆடுகிறா பொன்னூஞ்சல்..
மயா..னக் கொள்ளையில
தந்திடுவா திருச் சாம்பல்..(2)
அங்காளம்மா ஊஞ்சல் ஆடும்
அழகினகித்தான் பார்க்க வேண்டி...
ஆகாயத்து தெய்வம் எல்லாம்
அப்படியே வந்ததென்ன? (2)
மலையனூரு செஞ்சிருக்கும்
புண்ணியமும் என்ன என்ன? (2)
கோரஸ்:
அங்காளம்மா ! அங்காளம்மா ! தாலேலோ !
செங்காளம்மா ! செங்காளம்மா ! தாலேலோ ! (2)
சரணம் 2
---------
பம்பை, உடுக்கை ஓசையிலே..
பூசாரி பாட்டினிலே..
நம்பி வந்தோர் கூட்டத்திலே
ஆடுகிறா..பொன்னூஞ்சல்..(2)
முன்னும் பின்னும் ஆடும் ஊஞ்சல்..
அசைஞ்சிடாம பார்க்கும் கண்கள்..
பார்த்திருக்கும் அந்த நேரம்..
கொறஞ்சிடுமே மனசு பாரம்..(2)
பொறப்பெடுத்த பலனடைஞ்சோம்..
வேற என்ன வேணும்? வேணும்?
வானத்தில அமாவாச..
பூமியில...பௌர்ணமி..
முழுநிலவு முகத்துக்காரி..
முத்தழகி அங்காளி... (
ஊஞ்சலாட வந்துருக்கா..
மலையனூர் மண்ணிறங்கி..!
கோரஸ்:
அங்காளம்மா ! அங்காளம்மா ! தாலேலோ !
செங்காளம்மா ! செங்காளம்மா ! தாலேலோ ! (2)
Written by: P.G. Ragesh, Sri Devi Prasad