歌词

சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான் எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன் அன்பே எதற்காக சிரிப்பால் உலகை கொடுத்தாயே இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே நான் உனக்கென இருப்பது தெரியாதா எதை நான் சொல்வேன் பதிலாக இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே இயல்பாய் மனதை திறந்தாயே ஒரு முறை காதல் இரு முறை மோதல் பல முறை சாதல் வாழ்க்கையிலே ஒரு முறை கூடல் பல முறை தேடல் நெருக்கத்திலே ஒரு முறை காதல் இரு முறை மோதல் பல முறை சாதல் வாழ்க்கையிலே அலையே இல்லா கடல் போல இருந்தேன் அன்பே எதற்காக கிடைத்தாய் கரையாய் நடந்தேனே கிழக்காய் உதித்தாய் விடிந்தேனே மழையே இல்லா நிலம் போல பொறுத்தேன் அன்பே உனக்காக கொடுத்தாய் உன்னை நீ முழுதாக எடுத்தாய் எனையும் அழகாக எது வரை நீயோ அது வரை நானோ இது வரை ஆசை காதலிலே எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே எது வரை நீயோ அது வரை நானோ இது வரை ஆசை காதலிலே சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்
Writer(s): Dharan Kumar, Premkumar Paramasivam (yugaharathi) Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out