音樂影片
音樂影片
積分
演出藝人
ofRO
演出者
keli.thee
聲樂
Santhosh Narayanan
演出者
詞曲
ofRO
作曲
keli.thee
作詞
Santhosh Narayanan
作曲
製作與工程團隊
ofRO
製作人
Santhosh Narayanan
製作人
Rupendar Venkatesh
母帶工程師
Rohith J Abraham
錄音師
歌詞
[Chorus]
சேவல் சத்தம் speaker-ah பொளக்குது வெற்றிவேல்
[Verse 1]
நான் வடிவேலன பார்க்க பல படியேறுவேன்
என் குடி காத்த குமரேசன் மயில்வாகனன்
என்ன கண்கட்டி விட்டாளும் தனிகாட்டுல
திருப்பரங்குன்றத்துக்கு கடம்பா நீ வழிகாட்டுவ
[Verse 2]
ஞானம் மலை இருக்க பழம் எதுக்கு முருகனுக்கு
வேலன் தரை இறங்க தமிழனுக்கு பயம் எதுக்கு
துணைக்கு காவலுக்கு சேவல் இருக்க எனக்கெதுக்கு கவலை
நமக்கு கால் வழுக்கி கீழ் விழுந்தா கை கொடுப்பான் குமரன்
[Chorus]
நான் அழுதா கண்ண துடைக்க வந்து நிக்கும் வேலு
எல்லா மனுசனுக்கும் ஒரே ஒரு Rule-uh
அப்பன் முன்னாடி நம்ம எல்லாம் ஒரே ஊரு
தூக்கு என் அய்யனுக்கு தங்க காவடி தேரு
நான் சுங்கச்சாவடி தொறந்ததும்
உன்ன பார்க்க வண்டிய எடுத்தேன்
என் opponent-ங்க எல்லாரையும் என் கிட்ட இருந்து தடுத்த
உன்ன உட்டா யார் இருக்கா என்ன இப்ப ஒருத்தன் ஜெயிச்சு
பழனிமலை பஞ்சாமிர்தம் எல்லாருக்கும் கொடுப்பேன்
[Chorus]
சேவல் சத்தம் speaker-ah பொளக்குது வெற்றிவேல்
[Verse 3]
கிருத்திகைக்கு விரதம் நாங்க கவுச்சி சாப்பிட மாட்டோம்
திருத்தனிக்கு சந்தனத்த தேச்சு மொட்டைய போட்டோம்
ஐப்பசிக்கு குங்கம் மஞ்சா வெச்சு வாசல்ல கோலம்
கந்த சஷ்டி கவசம் நம்ம எல்லாரையும் காக்கும்
கடை வீதியில உன் முகம் ஆட்டோ பின்னாடி வேல் வரும்
உன் மகன தொட்டா சகுனம் கேட்டு போரெடுக்கும் ரானுவம்
உன் மனசு எப்பவும் தாராளம், உன் பக்தர்கெல்லாம் ஏராளம்
பழத்துக்காக பழனியுல நின்னு எனக்கு பிடிக்கும் சிகாவரம்
ரொம்ப ரோதனை பட்டேன் லோல் பட்டேன் முன்னால
கதையை பேசி என்ன தள்ளுநானுங்க பின்னால
உன்னைய நெஞ்சுல வைச்சதால நானும் win ஆனேன்
வேலு இறங்குறத பார்த்தேன் என் கண்ணால
[Chorus]
நான் அழுதா கண்ண துடைக்க வந்து நிக்கும் வேலு
எல்லா மனுசனுக்கும் ஒரே ஒரு Rule-uh
அப்பன் முன்னாடி நம்ம எல்லாம் ஒரே ஊரு
தூக்கு என் அய்யனுக்கு தங்க காவடி தேரு
நான் சுங்கச்சாவடி தொறந்ததும்
உன்ன பார்க்க வண்டிய எடுத்தேன்
என் opponent-ங்க எல்லாரையும் என் கிட்ட இருந்து தடுத்த
உன்ன உட்டா யார் இருக்கா என்ன இப்ப ஒருத்தன் ஜெயிச்சு
பழனிமலை பஞ்சாமிர்தம் எல்லாருக்கும் கொடுப்பேன்
[Chorus]
சேவல் சத்தம் speaker-ah பொளக்குது வெற்றிவேல்
Written by: Santhosh Narayanan, keli.thee, ofRO


