album cover
Oru Rojathottam
4,353
Tamil
Oru Rojathottam was released on January 21, 2000 by Star Music as a part of the album Manu Needhi (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateJanuary 21, 2000
LabelStar Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM93

Music Video

Music Video

Lyrics

ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை
பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றில் ஏறியே
நடந்து போகிறேன்
உன்னை கண்டதாலா
அட சாமத்தில் சூரியன்
ஜன்னலை தட்டுதே
கை கோர்த்ததாலா
ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
மனு போட்ட கண் சுகமா
உன் மனசுக்குள் நான் சுகமா
என் மார்போடு தலை சாய்க்கும்
மாமாவே சுகமா சுகமா
சுகமா சுகமா
சுகமா சுகமா
தேனூறும் இதழ் சுகமா
நான் தீண்டாத இடம் சுகமா
நீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள்
சுகமா சுகமா
நான் கடிச்ச நடு விரலில்
நக கண்ணும் சுகம் தானே
இடைவெளிகள் குறைந்து விட்டால்
இம்சைகளும் சுகம் தானே
இனி உன்னோடு நான் இருக்கும்
நொடி எல்லாம் பொன் இருக்கும்
நீ இல்லாமல் நான் நடக்க
வழியெல்லாம் முள் இருக்கும்
அட வெண்ணிலா வேர்குதே
புன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா
ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
அலை பாயும் குழல் சுகமா
உன் அழகான செவி சுகமா
உன் கழுத்தோரம் கவி பாடும்
சிறு மச்சம் சுகமா சுகமா
சுகமா சுகமா
சுகமா சுகமா
மலை தூக்கும் பலம் சுகமா
என் மடி சாயும் தலை சுகமா
நான் தடுத்தாலும் கேக்காத
பிடிவாதம் சுகமா சுகமா
என்னோட ஆயுள்எல்லாம்
கூடுதடி உன்னால
உன்னோடு வாழ்வதிலே
மரணம் இல்லை பின்னாலே
நான் பூவாலே உடை தைத்து
பூங்காற்றில் அனுப்பிருந்தேன்
நீ பூச்சூடும் கூந்தலிலே
உனை சூடி காத்திருந்தேன்
அட என்னை நீ உன்னை நான்
என்னமோ செய்றோம்
காதல் வென்றதாலா
ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை
பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றில் ஏறியே
நடந்து போகிறேன்
உன்னை கண்டதாலா
அட சாமத்தில் சூரியன்
ஜன்னலை தட்டுதே
கை கோர்த்ததாலா
Written by: Deva
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...