Lyrics
காலை அதிகாலை
என் கால்கள் தரைமேலே
நீளுகின்ற சாலையை
ஆளுகின்ற நான்
காலை அதிகாலை
மென் பூக்கள் விழி மேலே
வெள்ளையாகும் பூமியில்
பிள்ளையாக நான்
மூச்சுக்காற்று தூய்மையாக
மேனி எங்கும் நீர் பூக்க
கோடை ஒன்றை போலவே
ஓடுகின்ற நான்
அதிகாலையே அதிகாலையே
முதல் காதல் நீதானே
அதிகாலையே அதிகாலையே
தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே
உந்தன் பெருமைகளை
இங்கு யாரும் அறியவில்லை
விழி மூடிக் கனவொன்று
இந்த ஊரும் கிடைக்கிறதே
நீண்ட இரவுகளை
உந்தன் பார்வை கரைந்திடுமே
எனக்கென்று நீ தினம் தோன்ற
இந்த உள்ளம் துடிக்கிறதே
வைர வைகரை எனக்கெனதானே
இந்த தாமரை மலர் துணை துளிர்த்திட
தினம் தினம் எனக்கென ஒலித்திடுதே
காலை அதிகாலை
என் கால்கள் தரைமேலே
நீளுகின்ற சாலையை
ஆளுகின்ற நான்
காலை அதிகாலை (காலை அதிகாலை)
மென் பூக்கள் விழி மேலே
வெள்ளையாகும் பூமியில்
பிள்ளையாக நான்
நெஞ்சம் கொஞ்சம் வேகமாக
ரத்தம் மொத்தம் சுத்தமாக
இன்று எந்தன் வானிலே
மின்னுகின்ற நான்
அதிகாலையே அதிகாலையே
முதல் காதல் நீதானே
அதிகாலையே அதிகாலையே
தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே
காலை அதிகாலை...
Writer(s): Madhan Karky Vairamuthu, Dharan Kumar C
Lyrics powered by www.musixmatch.com