Lyrics

வாசமுள்ள பூவா நாம் வடிவெடுக்க என்னஇல. மோசமா என் கதையோ முடிஞ்சது ஏன் சொல்லம்மா. பாசத்துல உன் வயித்தில் பத்திரமா வச்சிருக்க. மாசம் பத்து ஆகும்முன்ன மடிஞ்சது யார் குத்தமம்மா உன் முகத்த நான் அறிய. என் முகத்த நீ அறிய காலம் ஒன்னு சேரும்முன்னே. காத்திருந்தேன் உள்ளுக்குள்ள தாயே நீ முத்தமிட. தாங்கி என்னத் தொட்டிலிட ஆசப்பட்ட என் பொறப்பு அழிஞ்சதையும் என்ன சொல்ல. துள்ளி விளையாடலையே தோல் சாஞ்சு தூங்கலையே. பள்ளிக்கூடம் போகலையே பால் நிலவ தாங்கலையே. என்னத்தந்த அப்பன நான் ஏரெடுத்தும் பார்க்கலையே. மண்ண அள்ளத்திங்கும் முன்ன மண்ணுக்குள்ளப் போனதென்ன. தப்பு ஒன்னு செய்யலையே தொல்ல தர என்னலையே. கூடிழந்த கொஞ்சும் கிளி குப்பக்கூலம் ஆனதென்ன. வாசமுள்ள பூவா நாம் வடிவெடுக்க என்னஇல. மோசமா என் கதையோ முடிஞ்சது ஏன் சொல்லம்மா. மின்னும் ஒரு சூரியனாம் மீண்டுமே நான் வருவேன். சென்மம் பல தாண்டியுந்தான் சேவை செய்ய சேர்ந்திடுவேன். நெஞ்சிக்குள்ள சித்திரமா உங்கல நான் தீட்டி வைப்பேன். செல்லம் கொஞ்சும் வீட்டுக்குள்ள சீக்கிரமா நான் பொறப்பேன். உள்ள அன்பு மொத்தத்தையும் அள்ளி அள்ளி சேகரிப்பேன். நல்லப்புள்ளையாய் இருந்து பேரு புகழ் நானெடுப்பேன். ஆரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
Writer(s): Premkumar Paramasivam, N. Justin Prabakaran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out