Lyrics

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம் உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம் கோடு கூட ஓவியத்தின் பாகமே ஊடல் கூட காதல் என்று ஆகுமே ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம் என் நெஞ்சத்தின் இடம் தொட்டு விரல் என்னும் கோல் கொண்டு நம் காதல் வரைவோமே வா... பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது உற்றுப் பார்க்கும் ஆணின் கண்ணில் உள்ளது பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன் பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன் மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே மடியோடு விழுந்தாயே வா... பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி...
Writer(s): Vidya Sagar, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out