album cover
album cover
Karu Karu was released on February 16, 2007 by Ayngaran as a part of the album Patchai Kili Muthucharam (Original Motion Picture Soundtrack) - EP
BPM114
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

கரு-கரு விழிகளால் ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிட-ததும்பிட சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
நீ (ஒரு மல்லிச்சரமே!)
நீ (இலை சிந்தும் மரமே!)
என் (புது வெள்ளிக் குடமே!)
உன்னைத் தேடும் கண்கள்!
ஏய்! (நீ தங்கச் சிலையா?)
வெண் (நுரை பொங்கும் மலையா?)
மன் (-மதன் பின்னும் வலையா?)
உன்னைத் தேடும் கண்கள்!
புது-புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள்-கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட-மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி-மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீர் நீதானா?
தனி ஒரு அன்றில் நீதானா?
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?
நீ (ஒரு மல்லிச்சரமே!)
மண்ணில் (இலை சிந்தும் மரமே!)
மின்னும் (புது வெள்ளிக் குடமே!)
உன்னைத் தேடும் கண்கள்!
ஏய்! (நீ தங்கச் சிலையா?)
வெள்ளை (நுரை பொங்கும் மலையா?)
அம்பால் (-மதன் பின்னும் வலையா?)
உன்னைத் தேடும் கண்கள்!
ஒருநாள், ஒருநாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை-மழை
உள்ளுக்குள்ளே ஒச்சுக்கொட்டி தொடந்திடும் பிழை-பிழை
கரு-கரு விழிகளால் ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிட-ததும்பிட சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
தாமரை இலை நீர் நீதானா?
தனி ஒரு அன்றில் நீதானா?
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?
தாமரை இலை நீர் நீதானா? (ஒரு மல்லிச்சரமே!)
தனி ஒரு அன்றில் நீதானா? (இலை சிந்தும் மரமே!)
புயல் தரும் தென்றல் நீதானா? (நீ தங்கச் சிலையா?)
புதையல் நீதானா? (-மதன் பின்னும் வலையா?)
ஒரு மல்லிச்சரமே!
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...