歌词
வெற்றி வேலடா
இது வீர வேலடா
இந்த வேலை ஏந்தும் வேலை
உன்னை வெல்பவன் யாரடா?
வெற்றி கொல்லடா
உன் காதல் வீரம் ரெண்டும் வாழ
வேங்கயாய் நில்லடா
மிதிப்பது நிலமென பொறுப்பது காதல்
எரிமலை நெருப்பென வெடிப்பது காதல்
பகைவனை எரித்திட ஒரு முறை வெடிப்பாயே!
அழுவதும் தொழுவதும் கோழைகள் பழக்கம்
தமிழ் மகள் உடலுக்கு தழும்புகள் பதக்கம்
எதிரியின் முகத்தினில் உன் பேரை பொறிப்பாயே!
சிரித்தால் பகையை, அவன் கேலி சுடவில்லையா?
காதல் வெல்லும் நேரம் தான்
இது இல்லையா?
துளி தான், நெருப்பே
அது காட்டை சுடவில்லையா
சொல்லு, உந்தன் நெஞ்சுக்குள்
நெரிப்பில்லையா
உன் காதல் தேவதை யாசித்தால்
நீ உடலும் உயிரும் தந்து விடு
ஒரு போரை பகைவன் நேசித்தால்
அவன் எலும்பை சுட்டு விடு
ஜெயம், நிச்சயம், நிச்சயம், நிச்சயம்
ஜெயம், நிச்சயம்
உன் ஜெயம், நிச்சயம்
Written by: Nandalala, R. P. Patnaik


