Lyrics

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஓடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும் கட்டமர தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோசம் உண்டல்லோ பட்டுடுத்த தேவையில்ல முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு உண்டல்லோ பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய்மேல நீ போடு தூங்காத விருந்து நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ வெள்ளியல தாளந்தட்ட சொல்லியொரு மேளங்கோட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா மல்லியப்பூ மாலை கட்ட மாரியிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து காணாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் என்று கூடும் இன்றல்லோ
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out