album cover
album cover
Orey Oru was released on July 5, 2018 by Zee Music Company as a part of the album Kolamaavu Kokila (Coco) [Original Motion Picture Soundtrack]
BPM168
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
ஒரு அடிகூட தாங்காதே
ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே
ஒரே நொடியில் வீடும் கருகியதே
அந்நாளில், ஒரே ஒரு ஓடைமேலே ஒரு ஓடம் மிதந்திருக்க
ஒரே ஒரு வெள்ளம் வந்து அடித்து போனதே
ஒரே ஒரு கூட்டினுள்ளே ஒரு கூட்டம் ஒளிந்திருக்க
ஒரு கிளை முறிந்ததாலே கதை முடிந்ததே
மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ?
வேண்டியதெல்லாம் இனி எப்போது நடக்குமோ?
என் ஆசை ஒன்றே, என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒருநாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே, போதும்
சத்தமாய் நான் அழுதிடதான் இங்கு அத்தனையும் யுத்தமாக மாறுதோ
மொத்தமாய் நான் முடிந்திடதான் இன்று என்னைமீறி என்னனமோ ஆகுதோ
பாவமாய் நான் புதைந்திடதான் ஒரு சுழல் என்னை சுத்தி-சுத்தி சீண்டுதோ?
கோவமாய் நான் கிடந்திடதான் பல புதிர்களும் என்னை தேடுதோ?
ஒரு பனி மூட்டம்
இன்று பகை என தோன்றியதே
ஒரு முயல் கூட்டம்
புயல் நடுவில் திணறுதே
வாடியதெல்லாம் இனி மீண்டும் என்று மலருமோ?
தேடியதெல்லாம் இனி எப்போது கிடைக்குமோ?
என் ஆசை ஒன்றே, என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒருநாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே
மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ?
வேண்டியதெல்லாம் இனி எப்போது நடக்குமோ?
என் ஆசை ஒன்றே, என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒருநாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே, போதும்
Written by: Anirudh Ravichander, Vignesh Shivn
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...