Music Video

Music Video

Lyrics

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆஹா. நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆஹா. நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
Written by: Ilaiyaraaja, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...