Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
S. Janaki
Performer
Ramarajan
Actor
Gauthami
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Gangai Amaran
Lyrics
Lyrics
ஹே தந்தன தந்தன தந்தா
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
ஏரிக்கரை காத்தும்
ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம்
ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
வெத்தலைய மடிச்சு
மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு
முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே
இவ்வூரு என்ன ஊரு
நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு
வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
மாடு கண்ணு மேய்க்க
மேயிறதைப் பாா்க்க
மந்தைவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம்
போட்டு விளையாட
அரச மரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி
கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அழைச்சு
சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல
அட இங்கே உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல
மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரைப் போல ஊரும் இல்லை
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
Written by: Gangai Amaran, Ilaiyaraaja